உங்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர் யாரு னு தேவயானி கிட்ட கேட்டா உடனே “அஜீத்” னு தான் சொல்வாங்க! அந்த அளவுக்கு அஜீத்-அ அவங்களுக்கு பிடிக்கும். ஆனா அந்த அஜீத் நடிச்ச வரலாறு படத்துல நடிக்க மறுத்த தகவல் இப்ப வெளியாகி இருக்கு.
வரலாறு படத்துக்காக கே. எஸ். ரவிக்குமார் தேவயானி-ய அழைத்த பொழுது கோலங்கள் சீரியல்-ல ரொம்ப Busy ஆக இருந்தாங்க தேவயானி. அது மட்டும் இல்லாமல் கோலங்கள்-ல முதன்மை வேடம். ஆனால் வரலாறு-ல ஏற்கனவே அசின் நடிக்கிறதால, ரெண்டாம் பட்ச வேடம் நடிக்க தேவயானி-க்கு விருப்பம் இல்லை. அஜீத்-க்கு 4 படத்துல ஜோடியா நடிச்சு அத்தனையும் ஹிட் கொடுத்த தேவயானி வரலாறு-ல நடிக்காதது சரியான முடிவு தான். இந்த செய்திய சொன்னது இயக்குனர் திருச்செல்வம். இவர்தான் கோலங்கள் சீரியல்-ஓட இயக்குனர்.
இப்போ சன் டிவி-ல
வரும் எதிர்நீச்சல் சீரியல்-ஓட இயக்குனரும் இவர் தான். அந்த கால கட்டத்துல சினிமால
நடிப்பதை காட்டிலும் சீரியல்-ல நடிக்கவே தேவயானி ரொம்ப விருப்பப் பட்டதா திருச்செல்வம்
சொல்லிறுகாரு.
ஒருவேளை தேவயானி வரலாறு படத்துல நடிச்சிருந்தா எந்த கதாப்பாத்திரமா இருந்திருக்கும். கனிகா-வா? அது தேவாயானிக்கு பொருத்தமா இருந்திருக்குமா?
Comments
Post a Comment