தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமத்து வாழ்க்கையை தீவிரமாக சித்தரித்தவர். காதல், மோதல், சாதி பிரச்சினைகள், மதவாதம் போன்ற சமூக உணர்வுகளை தனது படங்களில் நேர்த்தியாகப் பதிவு செய்தவர். தமிழ்த் திரைப்பட உலகம் அவரை "இயக்குனர் இமயம்" எனப் போற்றியது.
புதிய நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு ஆழ்ந்த பங்களிப்பு செய்தவர். ஆனால், 83 வயதில் அவருக்குப் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தது. அவரது மகன் மனோஜ் பாரதிராஜா, 48-வது வயதில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இந்தச் செய்தி திரையுலகத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு குடும்பத்தின் பிரிவுகள்...
மனோஜின் மறைவுக்குப் பின்னர், பாரதிராஜா மற்றும் அவரது குடும்பம் பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்திற்குவந்தன. மனோஜ் மரணமடைந்த செய்தி கேள்விப்பட்ட உடனே, நீலாங்கரையில் இருந்த பாரதிராஜா, உடனே சேத்துப்பட்டில் உள்ள மகனின் வீட்டுக்குச் சென்றார். அதே நேரத்தில், அவரது தாயாரும் தனியாக ஒரு காரில் வந்தார்.
இது மட்டுமல்ல, பாரதிராஜா, அவரது மனைவி சந்திரலீலாவதி, மகன் மனோஜ் மூவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளாக பாரதிராஜா மற்றும் அவரது மனைவி வேறாக வசித்து வந்ததுடன், மனோஜும் தனியாக தனது மனைவி, மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவரின் சகோதரி ஜனனி, அமெரிக்காவில் தனியாக வசிக்கிறார்.
காரணங்கள் மர்மமாகவே உள்ளது...
என்ன காரணத்தால் இந்த குடும்பம் பிரிந்து வாழ்ந்தது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்பது மட்டும் புரிகிறது. அதேசமயம், மகன் மீதும், அவரின் குழந்தைகள் மீதும் பாரதிராஜா மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பது அவரின் பழைய வீடியோக்களில் இருந்து தெரிகிறது.
ஒரே குடும்பத்தில் அனைவரும் இணைந்து வாழ்ந்திருந்தால், மனோஜின் வாழ்க்கையில் இவ்வளவு மன அழுத்தம் ஏற்படாமலும் இருக்கலாம். பணமுள்ளதாக இருந்தாலும், குடும்ப இணைப்பின்மை, தனிமை ஆகியவை மனோஜை மனச்சோர்வுக்கு உள்ளாக்கியிருக்கலாம். இறுதியில், அவைதான் அவரது உயிரையும் பறித்துவிட்டதோ? என்பது தான் கேள்வியாகவே நிற்கிறது.
இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை நம்மிடம் நினைவூட்டுகிறது!
Comments
Post a Comment