பொங்கல் 2026: விஜய் ரசிகர்களுக்கு ஏக்கம் | Sivakarthikeyan Parasakthi 100 கோடி | TTT & Vaa Vaathiyaar Review & Collection
2026 பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகாதது சோகம் விஜய் ரசிகர்களுக்கு. விஜய் படம் தள்ளி போனதால… ஜீவாவோட தலைவர் தம்பி தலைமையில் படமும், கார்த்தியோட வா வாத்தியார் படமும் ரிலீஸ் ஆச்சு.
பராசக்தி ஏற்கனவே பொங்கல் ரேஸ்ல
ஜனநாயகனோட ஓடலாம்னு பார்த்துச்சு… ஆனா தனியா ஓடிக்கிட்டு இருக்கு. பராசக்தி படம்
நல்லா இருந்தாலும்… அத நல்லாருக்குனு சொல்றவங்க எல்லாரையும் புடிச்சு வம்பு
இழுக்குறாங்க விஜய் ரசிகர்கள். இருந்தாலுமே கூட பராசக்தி உலக அளவுல 100 கோடி வசூல்
எட்டி இருக்கு.
சிவகார்த்திகேயன் தொடர்ந்து 100 கோடிக்கு மேல வசூல் பண்ணி
டாப் ஆக்டரா வளர்ந்து நிக்குறார். இந்த
பொங்கல் ரேஸ்ல நல்ல லாபம் கொடுத்த படம் ஜீவாவோட TTT தான். மலையாளத்துல ஹிட் ஆன Falimyங்கிற காமெடி மூவி டைரக்டர் எடுத்த படம்… இந்த படத்துக்கு மக்கள்ட நல்ல வரவேற்பு. இதுவரை 17 கோடி வசூல் பன்னிருக்கு. ஆனா கரூர் சம்பவத்துல 41 பேர் இறந்ததுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழுதுக்கிட்டு சொன்ன ஒரு டயலாக்-ஐ படத்துல வச்சு… சம்பவத்த நார்மலைஸ் பண்றாங்களேனு ஒரு பக்கம் பிரச்சனை. இருந்தாலும் இது ஜீவாக்கு அடிஷனல் விளம்பரம் தான்.
கார்த்தியோட வா வாத்தியார் ரேஸ்லயே இல்ல… மக்கள் கிட்ட பெருசா வரவேற்பு இல்ல… நலன்குமாரசாமி மேல பெரிய
நம்பிக்கை வச்சு தியேட்டர் குள்ள போனவங்களுக்கு பெரிய ஏமாற்றம். கார்த்திக்கு
நேரம் சரியில்ல போல… மெய்யழகன் மாதிரி சூப்பர்
படம் கொடுத்த கார்த்தி அடுத்த படம் இப்படி கொடுப்பார்னு யாரும் எதிர்பார்க்கல… ஒரு
சிறப்பான நடிகருக்கு சரியான படம் அமையாதது வருத்தம் தான்.
சிவகாரதிக்கேயனின் முக்கிய வெற்றி படங்கள் மற்றும்
மைல்கற்கள்
- Maan
Karate (2014), Rajini Murugan (2016), Remo (2016) – காமெடி
மற்றும் ரொமான்ஸ் கலந்த வெற்றிகள்.
- Doctor
(2021) – Turning point; 100 கோடி
வசூல்.
- Don
(2022) – 125 கோடி
- Ayalaan
(2024), Maaveeran – விமர்சன ரீதியாக பாராட்டு.பெரிய வசூல் இல்லை
- Amaran
(2024) – அவரது மிகப்பெரிய வெற்றி; உலகளவில் 330+ கோடி வசூல். கமலிடம்
பாராட்டு
- 2025-ல் Madharaasi (AR Murugadoss உடன்) – சராசரி
வசூல். தோல்வி இல்லை
- 2026-ல் Parasakthi – அவரது 25வது படம்; 1965-ல் நடக்கும்
கதை, 100 கோடி கிளப் சேர்ந்த படங்களில் ஒன்று (தொடர்ந்து 100
கோடி+ வசூல் படங்கள்).
Comments
Post a Comment